சமீபத்தில் அதிக எதிர்பார்ப்பில் மண்ணைக் கவ்விய 6 படங்கள்.. தலையில் துண்டைப் போட்ட தயாரிப்பாளர்கள்

0
2

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் தொற்று காரணமாக படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நிறைய படங்கள் வெளியாகி வருகிறது. அதிலும் குறிப்பாக ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் எதிர்பார்ப்புடன் வெளியாகி பிளாப் ஆன படங்களை தற்போது பார்க்கலாம்.

வட்டம் : கமலக்கண்ணன் இயக்கத்தில் சிபி சத்யராஜ், ஆண்ட்ரியா நடிப்பில் ஜூலை 29 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளிவந்த படம் வட்டம். இந்த ஆண்டு சிபிராஜ் நடிப்பில் வெளியான மாயோன் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் வட்டம் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தது.

மகான் : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் மகான். அப்பா, மகன் இருவரும் முதல் முறையாக ஒரே படத்தில் நடித்து இருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது. ஆனால் மகான் படம் வெளியாகி மோசமான தோல்வியை சந்தித்தது.

மகா : கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட படம் மகா. ஆனால் இந்த ஆண்டுதான் வெளியானது. இப்படத்தில் சிம்பு, ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர். மகா படம் ஹன்சிகாவின் 50வது படம். சிம்பு-ஹன்சிகா பிரேக்கப் ஆனதற்கு பிறகு இப்படத்தில் இணைந்து நடித்திருந்ததால் ரசிகர்கள் மகா படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால இப்படம் அவர்களுக்கு ஏமாற்றத்தை தான் தந்தது.

மாறன் : கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், ஸ்மிருதி வெங்கட், மாளவிகா மோகன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மாறன். இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் வெளியானது. இதற்கு முன்னதாக தனுஷின் ஜகமே தந்திரம் படம் தோல்வியடைந்த நிலையில் மாறன் படமும் படு மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

ராக்கெட்ரி : முதல்முறையாக மாதவன் இயக்கத்தில் இந்திய விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுத்த படம் ராக்கெட்ரி. இப்படத்தில் மாதவன், சிம்ரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்காக மாதவன் பெரிய அளவில் புரோமோஷன் செய்தும் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

O2 : ஜி கே விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா, மாஸ்டர் ரித்திக் நடிப்பில் வெளியான திரைப்படம் O2. இப்படம் ஜூன் 17ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இல் வெளியானது. மேலும் நயன்தாராவின் திருமணத்திற்குப் பிறகு வெளியான முதல் படம். பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நயன்தாராவின் அறம், நெற்றிக்கண் படத்தை தொடர்ந்து வெளியானது o2. இப்படத்தில் சில காட்சிகளில் நயன்தாரா நடிக்க மறுத்ததாக தகவல் வெளியானது. இப்படம் தயாரிப்பாளரின் தலையில் துண்டை போடும் அளவிற்கு நஷ்டம் அடைந்தது.

The post சமீபத்தில் அதிக எதிர்பார்ப்பில் மண்ணைக் கவ்விய 6 படங்கள்.. தலையில் துண்டைப் போட்ட தயாரிப்பாளர்கள் appeared first on Cinemapettai.

Facebook Comments Box

Rate this Title

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.