யானைக்கும் அடி சறுக்கும்.. மணிரத்னம் பெயரை கெடுத்த 5 மோசமான படங்கள்

0
2

தமிழ் சினிமாவில் ஒரு தனி ட்ரெண்டை உருவாக்கி ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் மணிரத்தினம். பல புரட்சிகரமான கருத்துக்களை தைரியமாக சொல்லும் இவர் பல வருடங்களாக முன்னணி இயக்குனர் அந்தஸ்தில் இருக்கிறார்.

பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல இவர் சில தோல்வி படங்களையும் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இவரின் கேரியரில் மோசமான படங்கள் என்று விமர்சிக்கப்பட்ட ஐந்து படங்களை பற்றி இங்கு காண்போம்.

Also read:மணிரத்னத்தை மதிக்காத லைக்கா.. சொல்லாமல் எடுத்த முடிவால், விழி பிதுங்கி நிற்கும் நிலை!

பகல் நிலவு முரளி, ரேவதி, ராதிகா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்பட பாணியில் எடுக்கப்பட்டிருந்தது. மணிரத்னம் இதற்கு முன்பு இரண்டு திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் தமிழில் இதுதான் அவருக்கு முதல் திரைப்படம். பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தும் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் தோல்வி பட வரிசையில் இணைந்தது.

இருவர் அரசியல் கதைக்களமாக உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில் மோகன்லால், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், தபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் சில விமர்சனங்களையும் பெற்றது. அந்த வகையில் இப்படமும் மணிரத்தினத்திற்கு ஒரு தோல்வி படமாக அமைந்தது.

Also read:ராஜமௌலியால் தான் பொன்னியின் செல்வன் சாத்தியம்.. சரண்டராகி பிரமிக்க வைத்த மணிரத்தினம்

ராவணன் ராமாயண கதை கருவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்விராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதிலும் விக்ரமின் நடிப்பு பலரின் பாராட்டையும் பெற்றது. இருப்பினும் இப்படம் தோல்வி பட வரிசையில் இணைந்தது.

காற்று வெளியிடை கார்த்தி மற்றும் அதிதி ராவ் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ரொமான்ஸ் கலந்து எடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இந்த கதைக்களம் ரசிகர்களுக்கு பிடிக்காததால் இது தோல்வி படமாக மாறியது.

கடல் 80 காலகட்டத்தில் பிரபல நட்சத்திரங்களாக இருந்த கார்த்திக் மற்றும் ராதாவின் வாரிசுகளான கௌதம் கார்த்திக் மற்றும் துளசி இருவரும் இப்படத்தின் மூலம் அறிமுகமானார்கள். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த ஜோடி ஏமாற்றத்தையே கொடுத்தது. அந்த வகையில் மணிரத்தினத்தின் கேரியரில் எடுக்கப்பட்ட மோசமான திரைப்படம் என்ற விமர்சனத்தையும் இப்படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also read:நாலா பக்க வசூலுக்கு பலே திட்டம் போட்ட மணிரத்தினம்.. பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபலம்

Facebook Comments Box

Rate this Title

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.