அமலாபால் மிரட்டும் க்ரைம் திரில்லர்- கடாவர் விமர்சனம்

0
2

அமலாபாலை தயாரிப்பாளர் ஆக மாற்றியுள்ள படம் தான் இந்த கடாவர். அனூப் பணிக்கர் இயக்கியுள்ள இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அமைத்துக்கொடுத்துள்ளார் அபிலாஷ் பிள்ளை.

கதை– போலீஸ் சர்ஜன் கதாபாத்திரத்தில் அமலாபால், க்ரிமினலாஜி துறையில் டாக்ட்ரேட் என இவரின் அறிமுகம் நிகழ்கிறது. பிரேத பரிசோதனை செய்து அதில் பல உபயோகமான விஷயங்களை போலீசுக்கு பகிர்கிறார்.

காரில் கருகிய நிலையில் ஒரு பிணம் கிடைக்கிறது, அந்த மருத்துவரை கொன்றது நான் தான் என சொல்கிறார், சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி வெற்றி. அமலாபால் ஆலோசகராக கேசில் இணைகிறார். தன் மனைவி அதுல்யா ரவி சாவுக்கு தான் இவர் பழி வாங்குகிறார் என கண்டுபிடிக்கிறது போலீஸ்.

அடுத்த கொலையும் நிகழ்கிறது, சிறையில் உள்ள வெற்றிக்கு வெளியில் இருந்து ஊதுவது யார், என்ன காரணம் என ஒன்றன் பின் ஒன்றாக இரண்டாம் பாதியில் முடிச்சுகள் அவிழ்கப்படுகின்றது.

சினிமாபேட்டை அலசல்– படத்தின் முதல் சில நிமிடங்களில் நாமும் பிணவறையில் தான் உள்ளோமோ என்றளவுக்கு தத்ரூபமாக படமாக்கியுள்ளனர். அதிக சஸ்பென்ஸ்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்த விஷயங்களை வரிசையாக அடுக்குகிறார் இயக்குனர். முதல் பாதி தாறுமாறு.

எனினும் இரண்டாம் பாதியில் பல இடங்களில் லாஜிக் மீறல்கள், நாம் எளிதில் யூகிக்க கூடிய மருத்துவம் சார்ந்த குற்றங்கள் என திரைக்கதை படத்தின் சுவாரஸ்யத்துக்கு வேகத்தடையாக அமைந்துவிட்டது.

தயாரிப்பாளராக திரையரங்க ரிலீஸை தவிர்த்து புத்திசாலித்தனமாக ஓ டி டி ரிலீஸ் செய்துவிட்டார் அமலாபால். தனி ஒருத்தியாக இப்படத்தை சுமந்துள்ளார்.

சினிமாபேட்டை வெர்டிக்ட்– வீக் எண்ட் டயம் பாஸுக்கு ஏற்ற படம் தான் இந்த கடாவர். இரண்டாம் பாதியில் சற்றே கூடுதல் கவனம் செலுத்தி இருக்கும் பட்சத்தில் சூப்பர் படமாக வந்திருக்கும். எனினும் தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்.

சினிமாபேட்டை ரேட்டிங் 2.5/5

The post அமலாபால் மிரட்டும் க்ரைம் திரில்லர்- கடாவர் விமர்சனம் appeared first on Cinemapettai.

Facebook Comments Box

Rate this Title

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.