இன்று வரை நெகட்டிவ் கேரக்டரில் நடிக்காத 4 நடிகர்கள்.. பல லட்சம் கொட்டிக் கொடுத்தும் மறுத்த ஜாம்பவான்கள்

0
2

தமிழ் சினிமாவில் புதிய ட்ரெண்ட் ஒன்று உருவாகியுள்ளது. அதாவது பிரபல ஹீரோக்கள் தற்போது வில்லனாக நடித்து வருகிறார்கள். இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. ஆனால் அந்த காலகட்டத்தில் ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் வில்லனாக நடித்துள்ளனர்.

ஆனால் இன்று வரை தமிழ் சினிமாவில் நான்கு நடிகர்கள் மட்டும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. அதுமட்டுமின்றி இதில் மூன்று நடிகர்கள் மக்களை ஏமாற்றும் விளம்பரத்தில் கூட நடிக்க மறுத்துள்ளனர். அந்த நடிகர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

Also Read : 90களில் ஆதிக்கம் செலுத்திய ஜோடி.. பிரபு, குஷ்பூ நடிப்பில் வெற்றி பெற்ற 5 படங்கள்

பிரபு : சிவாஜி கணேசனின் வாரிசாக சினிமாவில் நுழைந்தவர் பிரபு. இளைய திலகம் என ரசிகர்களால் அழைக்கப்படும் பிரபு தற்போது வரை படங்களில் நடித்து வந்தாலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்ததில்லை. தற்போது பிரபுவின் மகன் விக்ரம் பிரபு சினிமாவில் ஹீரோவாக கலக்கி வருகிறார்.

விஜயகாந்த் : கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்போது அவரது ரசிகர்கள் கண்ணீர் கடலில் ஆழ்ந்துள்ளனர். மக்கள் ரசிக்கும் படியாக பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் விஜயகாந்த். அதுமட்டுமின்றி சில படங்களில் கௌரவ தோற்றங்களிலும் நடித்துள்ளார். ஆனால் இதுவரை நெகட்டிவ் ரோலில் நடித்ததில்லை. மேலும் விஜயகாந்த் எந்த விளம்பரத்திலும் நடிக்கவில்லை.

Also Read : ஒரே இயக்குனருடன் 17 படங்கள் பணியாற்றிய விஜயகாந்த்.. 80% சூப்பர் டூப்பர் ஹிட்

ராமராஜன் : 80களில் உச்ச நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். இவர் நடித்த கரகாட்டக்காரன் படம் 100 நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. இவர் நெகட்டிவ் கதாபாத்திரம் மற்றும் மக்களை ஏமாற்றும் விதமான விளம்பரங்களிலும் நடித்ததில்லை. ஆனால் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி உள்ளார்.

ராஜ்கிரன் : கரடு முரடான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகர் ராஜ்கிரண். இது போன்ற முரட்டுத்தனமான கதாபாத்திரங்களில் நடித்தாலும் நெகட்டிவ் ரோலில் ராஜ்கரன் இன்றுவரை நடித்ததில்லை. எந்த விளம்பரத்திலும் தற்போது வரை ராஜ்கிரண் நடித்ததில்லை.

Also Read : ராஜ்கிரண் கல்லாகட்டிய 5 திரைப்படங்கள்.. நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என அசத்திய 2 படங்கள்

Facebook Comments Box

Rate this Title

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.