வெறித்தனமாய் நாசர் மிரட்டிய 6 படங்கள்.. கமலுக்கு தண்ணிகாட்டிய தேவர்மகன் மாயனை மறக்க முடியுமா!

0
2

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர் நடிகர் நாசர். இவர் திரைக்கதை, வசனம், பாடலாசிரியர், பாடகர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர். மேலும் நாசர் வில்லனாக பல படங்களில் மிரட்டியுள்ளார். அது சிறந்த 6 படங்களை தற்போது பார்க்கலாம்.

குருதிப்புனல் : கமலின் கதையில் நாசர் இணைந்து நடித்த படம் குருதிப்புனல். இதில் கமலஹாசன், அர்ஜுன் இருவரும் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தனர். நாசர் பயங்கரவாத அமைப்பின் தலைவன் பத்ரியாக நடித்திருந்தார். இரண்டு சம்பவத்தில் நடக்கும் ரணகளமான கதைக்களம் தான் குருதிப்புனல். இப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

வால்டர் வெற்றிவேல் : பி வாசு இயக்கத்தில் சத்யராஜ், சுகன்யா, ரஞ்சிதா, நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வால்டர் வெற்றிவேல். இப்படத்தில் ராயப்பா என்ற கொடூர வில்லனாக நாசர் நடித்திருந்தார். இப்படத்தில் சத்யராஜ் ஆல் காவல் துறையிலிருந்து நீக்கப்பட்ட நாசர் அமைச்சராகிறார். அதன்பின்பு சத்யராஜை எப்படி பழிவாங்குகிறார் என்பதே வால்டர் வெற்றிவேல் படத்தின் கதை.

மகளிர் மட்டும் : கமலஹாசனின் கதை, தயாரிப்பில் உருவான படம் மகளிர் மட்டும். இப்படத்தில் ரேவதி, ஊர்வசி, ரோகிணி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் உயர்பதவியில் இருக்கும் நாசர் தனக்கு கீழே பணி புரியும் பெண்கள் மீது ஆசைப்படுகிறார். ஆனால் இந்த மூன்று பெண்களும் நாசருக்கு சரியான பதிலடி கொடுக்கின்றனர்.

இணைந்த கைகள் : அருண்பாண்டியன், ராம்கி நடிப்பில் வெளியான திரைப்படம் இணைந்த கைகள். இப்படம் பிரமாண்ட வெற்றியை அடைந்தது. இப்படத்தில் நாசர் பிகே ராய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளில் ராம்கி, நாசர் இடையே சண்டை காட்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு இருந்தது.

தவசி : விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த வெளியான திரைப்படம் தவசி. இப்படத்தில் சௌந்தர்யா, வடிவேலு, நாசர், ஜெயசுதா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் நாசர் சங்கரபாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் விஜயகாந்தின் பெயருக்கு கலங்கம் விளைவிக்க பல சூழ்ச்சிகளை செய்பவராக நாசர் கதாபாத்திரம் அமைந்திருந்தது.

தேவர் மகன் : இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, நடிப்பு என அனைத்தும் கமல் தான். இப்படத்தில் நடிப்பு அரக்கர்கள் சிவாஜி கணேசன், கமல் ஆகியோருக்கு இணையாக பாராட்டைப் பெற்றார் மாயன் நாசர். அவ்வாறு மாயாண்டி தேவர் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். அதிலும் கிளைமேக்ஸ் காட்சிகளில் கமல், நாசர் இடையே சண்டை காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டது.

Facebook Comments Box

Rate this Title

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.