கோடிக்கணக்கில் சம்பளம் கேட்ட நயன்தாரா.. லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய தயாரிப்பாளர்

0
2

திருமணம் முடிந்த கையோடு அட்லி இயக்கும் பாலிவுட் திரைப்படமான ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கப்போகும் நயன்தாரா, இந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டை ஒரு கலக்கு கலக்க போகிறார்.

ஜவான் படத்திற்கு 4 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது. இந்தப் படத்தை முடித்த பிறகு நயன்தாராவின் 75-வது படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார். இதனைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

ஹீரோயினை மையமாக வைத்து உருவாக உள்ள இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஆர் ரவீந்திரனின் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் ஜெய், சத்யராஜ் என பல பிரபலங்கள் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க உள்ளனர்.

தற்போது நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார். இதுவரைக்கும் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் இருவர் மட்டுமே 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வந்தனர். ஆனால் நயன்தாரா தனக்கும் 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதற்கு தயாரிப்பாளர் நயன்தாரா சம்பளத்தை குறைத்து 5 கோடி ரூபாய் கேட்கும்படி கூறியுள்ளார். அதாவது தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் ஆகிய இருவரும் தாங்கள் நடிக்கும் பட புரமோஷனில் கலந்துகொள்கிறார்கள். அதற்காக அவர்கள் 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டாலும் தவறில்லை.

ஆனால் நயன்தாரா தன்னுடைய சொந்தத் தயாரிப்பில் வெளியாகும் படங்களை மட்டும் தான் புரமோஷன் செய்கிறார். மற்ற தயாரிப்பாளர்கள் படங்களில் நடிக்கும்போது புரமோஷனில் கலந்துகொள்வதில்லை. அப்புறம் எதற்காக நயன்தாராவை சம்பளம் கொடுக்க வேண்டும் என லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி உள்ளார்.

Facebook Comments Box

Rate this Title

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.