ஓசியிலேயே கல்யாணம், ஹனிமூன் என ஊரை சுற்றும் நயன்தாரா.. வாழ்ந்த இப்படி வாழனும்

0
2

நயன்தாரா – விக்னேஷ் சிவன் மட்டுமே வேண்டும் என்று உறுதியாக மூன்று வருடம் காதலித்து பல விமர்சனங்களை தாண்டி ஒரு வழியாக கல்யாணமும் செய்து கொண்டார்கள். பலரும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்தது. முதலில் திருப்பதியில் நடத்த திட்டமிட்ட நயன்தாரா கடைசியில் பணத்திற்காக OTT தளத்திற்கு தனது திருமணத்தை விற்று அவர்கள் சொல்லும் படி திருமணத்தை நடத்தி முடித்தார்கள்.

இதன் மூலம் தனது திருமணத்திற்கு ஒரு பைசா செலவில்லாமல் 25 கோடி லாபம் பார்த்தார்கள் இந்த ஜோடி. ஆனால் கல்யாணத்திற்கு வந்தவர்கள் பல அவமானங்களை சந்தித்து ஏன் இந்த திருமணத்திற்கு வந்தோம் என்ற நிலைமையை உருவாக்கினார்கள். முக்கிய நடிகர்கள் யாரும் திருமணத்திற்கு வராமல் நயன்தாராவின் திருமண பிசினஸை முறியடித்தார்கள்.

Also read: பொண்டாட்டிக்கு சுத்தி போடுங்க விக்கி.. ஹனிமூன் புடைபடங்களை டிரண்டாக்கும் நயன்தாரா!

திருமணம் முடிந்தவுடன் நெட்பிளிக்ஸ் தளத்தில் வீடியோ வரும் என்று எதிர்பார்த்த நிலையில் வராமல் போனது. பொறுமை இழந்த நயன் ஜோடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இதனால் அந்த நிறுவனத்துடன் பிரச்சினைகளில் சிக்கி இரண்டு மாதம் கழித்து வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

இது ஒருபுறமிருக்க இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றனர். தினமும் அவர்கள் அடிக்கும் லூட்டிகளை புகைப்படங்களாக சோசியல் மீடியாவில் வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்தன. சரி முடிந்துவிட்டது என்று நினைக்கும் பொழுது இருவரும் ஸ்பெயின் இரண்டாவது ஹனிமூன் அங்கே தொடர்ந்தனர். அங்கும் பல புகைப்படங்கள் போதும்டா சாமி என்று சொல்லும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு கொண்டே இருந்தனர்.

Also read: கோடிக்கணக்கில் சம்பளம் கேட்ட நயன்தாரா.. லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய தயாரிப்பாளர்

இப்போது இவர்கள் சென்ற ஹனிமூன் கூட ஒரு பைசா செலவில்லாமல் சென்றிருக்கிறார்கள். ஜிடி ஹாலிடேஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம் இவர்கள் தங்கும் செலவு, சாப்பிடும் செலவு, ஊர் சுற்றும் செலவு அனைத்தையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். இவர்களுடன் 1 வீடியோ கேமராமேன், 2 புகைப்படக்காரர்கள், 1 வீடியோ எடிட்டர், தயாரிப்பாளர்கள் போன்றவர்களுடன் இவர்கள் எங்கு சென்றாலும் செல்வார்களாம்.

இவர்கள் எடுக்கும் புகைப்படத்தில் அந்த நிறுவனத்தின் பெயரை சேர்த்தால் மட்டும் போதும் மீதி அனைத்தும் அவர்கள் பார்த்துக் கொள்வார் என்று சொல்லிவிட்டனர். தாய்லாந்து முதல் ஸ்பெயின் வரை இவர்கள் அனைத்தும் ஓசியில் மட்டுமே செய்து கொண்டுள்ளார்கள்.

நயன்தாரா என்ற ஒரு வார்த்தை கல்யாண முதல் ஹனிமூன் வரை அனைத்தும் இலவசமாக கொடுத்து வந்துள்ளனர் பல நிறுவனங்கள். இது கேட்க நன்றாக இருந்தாலும் நயன்தாராவின் பெயரை கெடுக்கும் அளவிற்கு சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். இன்னும் வேற என்ன எல்லாம் இலவசமாக பெற போகிறார்கள் என்று தெரியவில்லை. இவையெல்லாம் நடந்தது விக்னேஷ்சிவனின் அறிவுறுத்தலின்படி அவரின் ஏற்பாட்டின்படி நடக்கிறது என்ற உண்மை வெளிவந்து இருக்கிறது.

Also read: நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பிய நெட்பிளிக்ஸ்.. டூம்மாங்கோலி வேலை செய்த விக்னேஷ் சிவன்

Facebook Comments Box

Rate this Title

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.