ராமராஜன் விவாகரத்துக்கு காரணமான நடிகை.. பல வருடம் கழித்து வெளியான உண்மை

0
2

அந்த காலகட்டத்தில் ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு இணையாக ராமராஜன் படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பெரிய நடிகர்களாக உள்ள நடிகர்களின் பட்டியலில் ராமராஜனின் பெயரும் இடம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ராமராஜன் உறுதியாக இருந்ததால் சினிமாவில் அவரால் நிலைத்து நிற்க முடியாமல் போனது.இந்நிலையில் ராமராஜன் தன்னுடன் நடித்த நடிகை நளினியை 1987ல் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

Also Read :ராமராஜனுடன் வெளிவந்த போஸ்டர்.. கோபத்தில் ஜெயலலிதா எடுத்த அதிரடி முடிவு

அப்போது பல படங்களில் பிஸியாக உச்ச நடிகையாக இருந்தார் நளினி. தனது அம்மாவின் பேச்சை மீறி ராமராஜனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை எம்ஜிஆர் தான் நடத்தி வைத்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்.

ஆனால் 2000ஆம் ஆண்டு ராமராஜன் மற்றும் நளினி இருவரும் பிரிந்து வாழ்வதாக முடிவெடுத்தனர். அதன்பின்பு இன்றுவரை இவர்கள் இருவரும் தனித்தனியாக தான் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பிரிவுக்கு காரணம் ஒரு நடிகை தான் என்று அப்போது கிசுகிசுக்கள் செய்தித்தாள்களில் வெளியானது.

Also Read :விபரித ஆசையால் வாழ்க்கையை இழந்த ராமராஜன்.. விஷயம் தெரிந்து விவாகரத்தான சம்பவம்!

அதாவது சேது படத்தின் மூலம் அறிமுகமான அபிதா சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் ராமராஜனின் சீறிவரும் காளை என்ற படத்தில் அபிதா நடித்திருந்தார். அப்போது ராமராஜனின் விவாகரத்துக்கு காரணம் அபிதா தான் என செய்தித்தாள்களில் கிசு கிசுக்கள் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமின்றி ராமராஜன் நளினியை விவாகரத்து செய்த பின்பு அபிதாவை இரண்டாவதாக திருமணம் செய்யப் போகிறார் என அப்போது கிசுகிசுக்கப்பட்டதாக அந்த பேட்டியில் அபிதா கூறியிருந்தார்.  இதனால் அவருக்கு சினிமாவில் நடிக்கவே விருப்பம் இல்லை எனவும் கூறியிருந்தார். ஒருவேளை அப்போது அபிதா, ராமராஜன் கிசுகிசுவால் தான் நளினி அவரைப் பிரிந்தாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

Also Read :Also Read :மகளுடன் ராமராஜன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.. நளினிக்கு ட்வின்ஸ்ஷா.!

Facebook Comments Box

Rate this Title

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.