சஸ்பென்ஸ் நிறைந்த ஜீவி 2.. அனல் பறக்கும் திரைவிமர்சனம்

0
2

சக்ஸஸ் ஆன படத்தின் இரண்டாம் பார்ட் எடுப்பது என்பது என்றுமே ரிஸ்க் தான், ஏனென்றால் மக்களுக்கு ஒரு அளவுகோலை ஏற்கனவே கொடுத்து விடுகிறார் இயக்குனர். வெற்றி – கோபிநாத் கூட்டணியில்  நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் நேற்று ரிலீஸாகியுள்ளது ஜீவி 2. இம்முறை சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார்.

விட்ட இடத்தில் இருந்தே இரண்டாம் பாதி தொடங்குகிறது. வெற்றிக்கு திருமணம் முடிந்து விட்டது. ஷேர் ஆட்டோ ஒட்டி பிழைப்பை நடத்தி வருகிறார். நண்பன் கருணாகரனை சந்திக்கிறார். வெற்றி கார் வாங்க முடிவு எடுக்கிறார், மனைவிக்கு கண் ஆப்பரேஷன் செய்யவும் பிளான் போடுகிறார். தன் நண்பனுக்கு டீ கடை வைத்து தருகிறார்.

நன்றாக செல்லும் வெற்றியின் வாழ்வில் மீண்டும் சிக்கல் ஏற்படுகிறது. காலேஜ் மாணவன் ஒருவன் வீட்டில் திருட பிளான் போடுகின்றனர். அந்த மாணவன் இறந்து விட போலீசில் சிக்குகின்றனர்.

அந்த மாணவனின் நண்பனை தேடி செல்கிறான் வெற்றி. பின்னர் அந்த நபர் யார், தான் திருடியது யாருடையது, கருணாகரன் தொலைத்த பை என்ன ஆனது என பல கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடிக்கிறார்.

இந்த பார்ட்டிலும் முக்கோண விதி, தொடர்வியல், கர்மா என முதல் பகுதி போலவே இயக்குனர் அசத்தியுள்ளார். கட்டாயம் முதல் பார்ட் பார்த்துவிட்டு பின் இதனை பார்ப்பதே உச்சிதம். படம் ஒகே வகையறா . முதல் பாதி ஸ்லோ, இரண்டாம் பாதி ஓகே.

வீக்கெண்டில் வீட்டில் அமர்ந்து ஹாயாக பார்க்க ஏற்ற படம். கட்டாயம் மூன்றாம் பார்ட் இருக்கும் என்பது மட்டும் உறுதி.

சினிமாபேட்டை ரேட்டிங் 2.5 / 5

The post சஸ்பென்ஸ் நிறைந்த ஜீவி 2.. அனல் பறக்கும் திரைவிமர்சனம் appeared first on Cinemapettai.

Facebook Comments Box

Rate this Title

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.