கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த யோகி பாபு.. விஷயத்தைக் கேட்டு அசந்து போன விஜய் சேதுபதி

0
2

யோகிபாபு தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், முன்னணி நடிகர்களை விட அதிக திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரையில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் யோகிபாபு நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, அதன்பின் ரஜினி, விஜய் சேதுபதி, அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து அசத்தி வருகிறார்.

ஒவ்வொரு வார வெள்ளிக் கிழமைகளிலும் முன்னணி நடிகர்கள் முதல் வளர்ந்து வரும் நடிகர்கள் வரை என எத்தனை திரைப்படங்கள் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் வந்தாலும் அதில் ஒரு திரைப்படத்திலாவது யோகிபாபு நடித்திருப்பார். அந்த அளவிற்கு இவரது மார்க்கெட் தமிழ் சினிமாவில் உயர்ந்துள்ளது

மேலும் மண்டேலா, கூர்கா, தர்மபிரபு உள்ளிட்ட சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இதில் மண்டேலா திரைப்படத்திற்கு 2 தேசிய விருது கிடைத்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் தங்கர்பச்சனின் இயக்கத்தில் கார்மேகங்கள் கலைகின்றன திரைப்படத்தில் நடிக்க யோகிபாபு ஒப்பந்தமாகி அப்படத்தின் பூஜையும் சமீபத்தில் நடைபெற்றது.

மேலும் விஜயின் வாரிசு திரைப்படத்திலும் யோகிபாபு நடித்து வரும் நிலையில், தற்போது வரை 41 திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முன்னணி நடிகர்களான பலரும் 3, 5 உள்ளிட்ட எண்களிலேயே படங்களை கையில் வைத்து நடித்து வரும் நிலையில், யோகி பாபு அனைவரையும் மிஞ்சியுள்ளார்.

மேலும் முன்னணி நடிகரான விஜய்சேதுபதி 10, 11 திரைப்படங்களில் தற்போது கமிட்டாகி உள்ள நிலையில் யோகிபாபு அவரையும் மிஞ்சி 41 திரைப்படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments Box

Rate this Title

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.